திடீரென "டைவ்" அடித்த விமானத்தால் பயணிகள் அச்சம்.. மிதப்பது போல் இருக்கையில் இருந்து மேல் எழும்பிய பயணிகள்

0 2098
திடீரென "டைவ்" அடித்த விமானத்தால் பயணிகள் அச்சம்.. மிதப்பது போல் இருக்கையில் இருந்து மேல் எழும்பிய பயணிகள்

மலேசிய விமானம் ஒன்று திடீரென டைவ் அடித்து 7,000 அடி கீழே இறங்கியதால், இருக்கையில் இருந்து திடீரென மேலெழும்பிய பயணிகள் மிதப்பது போல் உணர்ந்தனர்.

தலைநகர் கோலாலம்பூரில் இருந்து டவாவ் நகர் நோக்கி சென்ற போயிங் விமானம், புறப்பட்ட அரை மணி நேரத்தில் திடீரென டைவ் அடித்து,  சில வினாடிகளில், 31,000 அடி உயரத்தில் இருந்து 24,000 அடி உயரத்துக்கு  வந்தது.

அப்போது பயணிகள் யாரும் சீட் பெல்ட் அணியாததால், இருக்கையில் இருந்து திடீரென மேலெழுப்பப்பட்டு, உயிர் பயத்தில் அலறத் தொடங்கினர்.

சுமார் 10 நிமிடங்களுக்கு நிலையில்லாமல் வட்டமடித்த விமானம் மீண்டும் ஒரு முறை டைவ் அடித்து விட்டு இயல்பு நிலைக்குத் திரும்பியது.

இதையடுத்து விமான பைலட் மீண்டும் அந்த விமானத்தை கோலாலம்பூருக்கே திருப்பினார்.

மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட எந்திரக் கோலாறால் விமானம் மீண்டும் கோலலம்பூருக்குத் திருப்பப்பட்டதாக மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments